வியாழன், 11 ஆகஸ்ட், 2016

"There is no meaning, getting political independence without social independence"
இப்படித்தான் இந்தியத்தின் விடுதலையை எதிர்த்தனர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள். ஆனால் அந்தத் தலைவர்கள்
தேசவிரோதிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர் இன்றைய ஆதிக்கச் சாதியினரால். முதல் வட்ட மேசை மாநாட்டில்
கலந்துகண்ட தாத்தா "ராவ்பகதூர்" இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், பிரித்தானிய அரசரின் கைகுலுக்கச்சென்று சட்டென தனது
கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டார். வியப்பும், அவமானமும் ஒருசேர "ஏன் உங்கள் கையைப் பின்னுக்கு
இழுத்துக்கொண்டீர்" என பிரித்தானிய அரசர் கேட்க "If I touch and shake your hands, you may be polluted"  என்று தாத்தா
விடையிறுத்தார். "அதெப்படி? நீங்கள் தொட்டால் நான் எப்படி தீட்டாவேன்"? என்று கூற தாத்தா, இப்படித்தான் எங்களை இந்தியத்தில்
நடத்துகின்றனர் என்று கூறினார். அப்படியானால் உங்களில் ஒருவர் அடிபட்டு சாலையில் கிடந்தால் யாரும் காப்பாற்ற மாட்டார்களா?
என்று கேட்டார். உறுதியாக இல்லை என்று தாத்தா கூறினார். அப்போதுதான் பிரித்தானிய அரசர் காந்தியைத் தொடர்புகொண்டு முதலில்
இந்த சமூகப் பிரச்சினையை தீர்க்கப்பாருங்கள் என்று உறுதிபடக் கூறினார். இதன் பின்னர்தான் காந்தி ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு "ஹரிஜன்" என்று பெயர் வைத்தார். நாமெல்லாரும் ஒன்று என்று சப்பைக்கட்டு கட்டினார். அரசியல் சுதந்திரம் பெறப்பட்டது.
ஆனால் சமூக சுதந்திரம் பெறப்பட்டதா...? இன்றுவரை சேரிகளும், இரட்டைக்குவளை முறையும், தனிச் சுடுகாடு முறையும், பொதுவழியில்
ஒடுக்கப்பட்ட மக்கள் போக மறுப்பதும், ஒடுக்கப்பட்டமக்கள் உயர்கல்வி பெறுவதைத் தடுப்பதும், இதை எதிர்த்து கருத்துக்கூறும்
அறிஞர்களைக் கொலை செய்வதும் மலிந்துவிட்ட இந்நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடா....?

வியாழன், 16 ஜூன், 2016

<iframe SRC='http://live.mylivefootball.com' width='600' height='400' id=www.Newtvworld.com marginwidth=0 marginheight=0 hspace=0 vspace=0 frameborder=0 scrolling='no'></iframe>

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

https://www.facebook.com/photo.php?fbid=381334505225913&set=a.100662356626464.1323.100000481002125&type=3&theater
விழியோடும், வழியோடும் கொள்ளையடித்த கும்பலைக் கூட்டத்தோடு விரட்டிட இந்தக் கூட்டணி மிகவும் அவசியமானது...எனது தனிப்பட்ட கருத்து...யார் வரவேண்டும் என்பதல்ல....யார் வரக்கூடாது என்பதில்தான் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும், சாதியத்தாலும், மதத்தாலும், இலவசங்களாலும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்களான அஇஅதிமுக, திமுக, தமிழர்களை இந்தியர்களாக மட்டுமல்ல, மனிதர்களாகக்கூட மதிக்காத காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் வரவே கூடாது...சென்ற தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவிப்பதற்குக் காரணமாக இருந்த திமுகவும் காங்கிரசும் வரக்கூடாது என்பதற்காகவே ஒரு விபத்துப் போல அஇதிமுக விற்கு வாக்களித்தனர் மக்கள்...அதற்கான தண்டனையை செம்பரம்பாக்கம் வாயிலாக அனுபவித்தனர். ஆகவே தமிழக மக்கள் சிந்தித்துச் செயல்படவேண்டிய தருணம் இது. மீண்டும் அந்த நான்கு கட்சிகளைத் தேர்ந்தெடுத்தால் தமிழகத்தை எவராலும் காப்பாற்ற இயலாது...இந்நான்கு கட்சிகளுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஓரணியில் திரள வேண்டும்....தமிழகம் காப்பாற்றப்படவேண்டும் என்று ஒரு கர்நாடகத் தமிழன் அபுதாபியில் இருந்து துடிக்கிறேன்....