வெள்ளி, 19 நவம்பர், 2010

தேன் தமிழ்மொழி.

 தித்திக்கும் தேன்தமிழை செத்தமொழி சிதைத்திடுமா?
எத்திக்கும் எம்தமிழே நிலைத்திடுமா? - இத்தரையில்
எந்தமிழர் "தமிங்கிலிசு" தவிர்த்தாலே என்றென்றும்
செந்தமிழ் தான் வென்றிடுமே!             
                                                                                       -இராசசேகரன்...


இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!
இருப்பாய் தமிழா நெருப்பாய்!

குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
...குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்! - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? - புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!
- காசி ஆனந்தன்

    *
      Thiru Valavan
      வானுயர வளம்பெருக ஓங்கிப் புகழோச்சியவன்
      தேனினிய தெள்ளுமொழி செந்தமிழைப் பேசியவன்
      ஏட்டினில் பிறமொழியை எழுதி வைத்துப் பழக்குவதா?
      பேச்சினில் பிறமொழியைக் கலந்துதமிழ் கொல்லுவதா? (வானுயர )

      ...முத்தமிழ் வாழும் மொழி வடமொழி செத்தமொழி
      உலகினில் பேசுமொழி தமிழ்மொழி மூத்தமொழி
      கண்ணெனப் போற்று பொன்னல்லவோ கூறு
      கலப்பினைச் செய்யும் அழிப்பாரை ஓட்டு
      பாவாணர் சொன்னாரப்பா..... ஒட்டுண்ணி நமக்குத் சங்கதந்தான்

      செந்தமிழ் வாழ்வதும் மண்ணிதில் தாழ்வதும்
      சொந்த இனத்தினர் கையினில்தான் (வானுயர )

      கன்னடமும் களிதெலுங்கும் பிறந்ததும் எதனாலே ?
      இன்னமும் ஆங்கிலத்தைக் கலப்பதும் எதனாலே?
      மண்ணாகிப் போகும் பண்பாடும் சாகும்
      பொன்னான உன்றன் இனமாறிப் போகும்
      தப்பினைச் செய்யாதப்பா ... ஞாலத்தில் அழிந்து போவாயப்பா..

      ஆருயிர் என்பதும் ஆருடல் என்பதும்
      மண்ணில் தமிழுந்தன் அன்னையப்பா (வானுயர )

      நலம் பெற வாழ்க தமிழினமே - இந்த
      ஞாலத்தில் தனி நாட்டைச் சமைத்தே ...

      இரா.திருமாவளவன்

வெள்ளி, 5 நவம்பர், 2010

தமிழனின் புத்தாண்டுத் திருவிழா.

இதில் அய்யத்திற்கு இடமே இல்லை. பொங்கல் தான் தமிழரின் திருவிழா, தமிழ் புத்தாண்டு, வேளாண்மைக்கு விழா, வேளாண்மைக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா, உற்றார் உறவினரை மகிழ்வுடன் சந்திக்கும் விழா. தீபாவளிக்கு மாற்றாக ஒரு விழா என்றால் ...அது கார்த்திகை தீபத்திருவிழா.
இது தமிழனின் பொதுநல நோக்கத்தால், மக்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு தோன்றிய விழா.
(நளி)கார்த்திகை மாதத்தில் இருள் அதிகமாக இருக்கும். வழிப்போக்கர்களுக்காகவும், ஊர்மக்கள் வெளியில் நடமாட ஏதுவாக இருக்கட்டும் என்று, வெளி வாயிலில் விளக்கேற்றி. நாளடைவில் விளக்கு வைப்பதை சற்று அழகுபடுத்தி வரிசையாக வைக்கத்தொடங்கினர். இதுவே பின்னாளில் மாற்றுக்கதைகள் சொல்லப்பட்டு, வேறு விழாக்களாக மாற்றப்பட்டுவிட்டன என்பது எனது கருத்து.#

#
தமிழன் பகலவனைத்தான் முதல் இறைவனாக வணங்கினான். பூமியின் இயக்கமும், அனைத்து உயிர்களின் தோற்றமும் பகலவனாலன்றி வேறில்லை எனத் தமிழன் அறிந்திருந்தான். "பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே, பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே" என்பதை முழுதாக
அற...ிந்திருந்தான். வள்ளுவனும் இதனை "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பக(ல)வன் முதற்றே உலகு" என்று பகலவனை முன்னிறுத்தியே பாடினார். அதற்கு வேறு கதைகளை திரித்துக் கூறினர், ஆரியர்.#

அந்தப் பகலவன், தென் திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரும் நாளையே, தமிழன், தனது புத்தாண்டாகக்கொண்டான். இதில் போகி பண்டிகையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆரியர். அதாவது தமிழர் எழுதிய பாடல்கள், வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் எரித்தால், அல்லது ஓடும் நீரில் போட்டால் உங்களுககு மோட்சம் கிடைக்கும் என்று கூறி தமிழனின் வரலாற்றை திட்டமிட்டு அழித்தனர், ஆரியர்.

#எப்படியாயினும் சுறவம்(தை) முதல் நாளே தமிழனின் புத்தாண்டு. அதுவே எந்த அருவருப்பான ஆரியக்கதைகளும் இல்லாத, முழுக்க முழுக்க அறிவியல் தன்மையோடு கூடிய, உழைப்பையே பெரிதும் போற்றக்கூடிய பொங்கல் தான் தமிழனின் ஒரே திருவிழாவாக இருக்கமுடியும். இருக்கவேண்டும். செந்தமிழே வெல்லும்...!!

Facebook

Facebook

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

Tamizachi : : தமிழச்சி

Tamizachi : : தமிழச்சி

கோலார் தங்கவயல்.

                    கோலார் தங்கவயல்!!  நான் பிறந்த மண். "மினி லண்டன்" என்று அழைக்கப்பட்ட கோலார்  தங்கவயலில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலேயே  தங்கம் கிடைத்ததாக வரலாறு கூறுகிறது. "கர்நாடக புலி"   என்று அழைக்கப்படும் திப்புசுல்தான், தங்கவயலில் தங்கம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
                                             சாம்பியன் ரீப் மைன்ஸ்                                                                                                                1885 -ம் ஆண்டில், ஜான் டைலர் & கம்பெனி  யால் தங்கவயலில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப் பட்டது. சுரங்கப் பணிக்காக பணியாளர்களை, தமிழ்நாட்டின் வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களை பெருமளவில் அழைத்து வந்தனர். அதாவது 90 விழுக்காடு தமிழர்களே.! அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே!!
                       துவக்ககாலத்தில் சுரங்கத்த் தொழிலாளர்கள்  பட்ட துன்பங்கள் சொல்லவொண்ணாது. வாரத்தில் திங்களன்று சுரங்கத்துள் இறங்கினால், சனிக்கிழமை மாலைதான் வெளியில் வருவார்கள். அதற்கு ஒரு பழமொழியும் சொல்வார்கள். உள்ளே போனால் பிணம். வெளியே வந்தால் பணம்" என்று. அது முழுக்க முழுக்க உண்மையே. 
                        தங்கத்தை எடுப்பதற்காக, பாறையில் துளையிட்டு, வெடிமருந்தை நிரப்பி, வெடிக்க வைப்பார்கள். அப்போதெல்லாம் வெடிமருந்து பூசப்பட்ட சணல் கயிறுதான் திரியாக பயன்படுத்தப்பட்டது. திரியை கொளுத்திவிட்டு உடனே தூரத்துக்கு செல்லவேண்டும்.ஆனால்  சுரங்கத்துக்குள் அப்படியெல்லாம் உடனே வேறிடத்துக்கு மாறி சென்றுவிடமுடியாது. வெடிப்பதற்குள் வேறிடம் செல்லவில்லை என்றால், அவர்களும் வெடியில் சிக்கி உயிரழக்க வேண்டியதுதான்.
                        வெடி வைத்து முடிந்த பின்னால் , பாறைகளின் இடுக்கில் காற்று  புகுந்து கொண்டுவிடும். அது வெப்பமடைந்து, ஒரு கட்டத்தில் வெடித்துச் சிதறிவிடும். அந்த நேரத்தில் தொழிலாளர்கள் அங்கிருந்தால், அவர்கள் உயிரை இழக்க வேண்டியதுதான்.
இதை (AIR BLAST ) என்று  சொல்வார்கள்.
                          ஒரு நாளைக்கு குறைந்தது அய்ந்து முறையாவது,  இந்த வெடிச் சத்தத்தோடு நில அதிர்வும் உணரப்படும்.
                                                                                                         ....மீண்டும் வரும்.....