ஞாயிறு, 16 அக்டோபர், 2011
வெள்ளி, 30 செப்டம்பர், 2011
மட்டமான பேச்சு தன் வாயைக் கெடுக்குதுங்க அதை
வெட்டித்தனமா கேக்குறவங்க காதையும் கெடுக்குதுங்க
சந்திலும் பொந்திலும் வாதம் அதால்
தலைவலி மருந்துக்கு லாபம்
அந்த ஜாடையிலே சில கேடிகள் செய்வது
சட்டையின் பைகளைக் கெடுக்குதுங்க
கும்பல் சேர்த்து வம்புவளர்த்து
குடும்பத்தைக் கலைக்குதுங்க பெரும்
குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி போழப்பையும் கெடுக்குதுங்க
புரளியும் வதந்தியும் மூட்டி ஒரு பொய்யை நூறாகக் கூட்டி
கரும் பூதமென்றும் பெரும் பேய்களென்றும்
பல பாதையில் மூளையைக் கெடுக்குதுங்க...
அறையில் வளர்ந்து வெளியில் பறந்து அவதிப் படுத்துதுங்க
ஊரை அவதிப் படுத்துதுங்க அது
அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே அமைதியைக் கெடுக்குதுங்க
நாட்டின் அமைதியைக் கெடுக்குதுங்க
வாழ்வு பொய்யென்று காட்டி
உடல் மாயக்கூடென்று கூட்டி
உயர் வானத்திலே பரலோகத்தைப் பாரென
மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க...
செவ்வாய், 12 ஜூலை, 2011
வள்ளுவத்தின் வீழ்ச்சி.
தமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை
தனியாக படிக்க இங்கே சுடுக்கிடவும்
கூட்டத்தின் தலைவர் அவர்களே!
கூடியிருக்கும் அறிஞர் பெருமக்களே!
அரசியல் பெருந்தகைகளே!
அறிவார்ந்த சான்றோர்களே!
இனிய தமிழ் நெஞ்சங்களே!
வணக்கம். வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற என்னுடைய நூலின் இரண்டாம் பதிப்பை இந்த அவையின் முன்னால் வைக்கின்றேன். இந்த நூலின் முதற்பதிப்புக்கு வெளீயீட்டு விழா எதுவும் எடுக்கப்பட வில்லை. திருச்சியில் இந் நூலைப் பற்றிய சிறிய அறிமுகக் கூட்டம் மட்டுமே நடைபெற்றது. இதன் முதற்பதிப்பின் மீதான மதிப்புரையோ திறனாய்வோ வரவில்லை. ஓரிரு சிற்றிதழ்கள் மட்டும் ஆறுதலாய், சிறிய அறிமுகத்தை மட்டுமே செய்தன. அதே நிலை என்றில்லாமல், மதிப்புரைகளும் திறனாய்வுகளும் இந்த முறை வரும் என்ற எதிர்பார்ப்புடன் இந் நூலின் இரண்டாம் பதிப்பை உங்கள்முன் வைக்கின்றேன்.
நூலின் உள்ளீட்டைப் பற்றிய சுருக்கமான குறிப்பு இது: தமிழரின் அணுவியம், கிரேக்க அணுவியத்தைவிட மிகவும் முந்தையது. மணிமேகலை, நீலகேசி முதலான நூல்களில் காணப்படும் தமிழரின் அணுக் கோட்பாடு, கிரேக்க அணுக்கோட்பாட்டைவிடச் செறிவானது; செம்மையானது; மேம்பட்டது. இந்த நூலின் முதல் படலம் அதை விளக்குகின்றது.
கணியத்திலும் வானியலிலும் முன்னோடிகளாயிருந்தவர்கள் வள்ளுவக் கணியர்கள். அவர்கள் கதைகளாய்ப் புனைந்து வைத்த வானியல் உருவகங்களே மறைந்த தமிழ் நான்மறையின் உள்ளீடு. இந்த மெய்ம்மையை விரித்துரைக்கின்றது நூலின் இரண்டாம் படலம்.
உலகளாவியது -- பொதுவானது -- குறிப்பானது அல்லது சிறப்பானது என்பன அறிதலின் -- கருத்தாக்கத்தின் -- வெவ்வேறு வரம்புகளாகும். இதைக் கருத்தில்கொண்டே சிறப்பியம் (வைசேடிகம்) என்ற தனி மெய்யியல் பார்வை தமிழில் தோன்றியது.
மற்கலி என்பாரின் அணுக்கோட்பாட்டைத் தழுவிக் கணி ஆதன் (கணாதன்) என்பார் வடித்த தனி மெய்யியல் பள்ளியே சிறப்பியமாகும். அம் மற்கலி, ஒன்பதாம் கதிர் என்னும் நூலை இயற்றினார். அந் நூலின் திருட்டு வடிவமே கணி ஆதன் சங்கதத்தில் (சமற்கிருதத்தில்) இயற்றிய வைசேடிக சூத்திரம் என்ற நூல். இந் நூலின் மூன்றாம் படலம் அதைப் புலப்படுத்துகின்றது.
இறுதியாக, தீர்ப்பு என்ற பகுதி இந் நூலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே நூலாயிருந்த தமிழ் நான்மறையை -- மூலமறையை -- நான்காக்கிப் பௌழிகம், தைத்திரியம், சாமம், தலவகாரம் என்று பாகதமொழியில் முதலில் மொழிபெயர்த்தனர். பின்னர்ப் பாகதத்திலிருந்து இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் பெயர்களில் கி. பி. 4ஆம் நூற்றாண்டில் அவற்றைச் சங்கதமாக்கினர். இதைச் செய்தவர்கள் ‘ஆரியர்’ என்ற பெயரில் வந்த வடுகப் பிராமணர்களே ஆவர். அவ்வாறு செய்தபின், மூலநூலான தமிழ் நான்மறையை இல்லாது ஒழித்தனர். இதனை எடுத்துரைக்கின்றது தீர்ப்பு என்னும் படலம். இதுதான் நூலின் சுருக்கம்.
இனி நாட்டு நடப்புக்கு வருவோம்!
சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை அமைப்பதற்காக, டாட்டாவுக்கும் அம்பானிகளுக்கும் பன்னாட்டு முதலாளியப் பெருமுதலைகளுக்கும் தமிழகத்தையே பங்கு போட்டுத் தந்துவிட்டால், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுமாம்! அச் சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை எதிர்ப்பவர்களெல்லாம் தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களாம்! தமிழரின் காணிகளை -- மண்ணை -- வந்தவனுக்கெல்லாம் தாரை வார்த்துவிட்டால், வேலை வாய்ப்புகள் மலைபோல் குவியுமாம்! இதுதான் வளர்ச்சி -- Development -- என்பதாம். உலகமயமாக்கம் என்னும் பெயரில் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளையும் அவற்றின் பொருளியல்களையும் இயற்கை வளங்களையும் இறைமையையும் உலகப் பணநிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றின் காலடியில் வைக்கச் செய்யும் சூழ்ச்சிக்குரிய உத்திகளில் ஒன்றுதான் வளர்ச்சி (Development) என்னும் திருமந்திரம். தமிழகத்தை ஆண்டுவரும் திராவிட வந்தேறிகளுக்கு அதனுடைய உண்மையான பொருள் தெரியுமோ என்னவோ தெரியவில்லை. ஆயினும், ‘வளர்ச்சி’ (Development) என்னும் மந்திரத்தை இவர்களும்கூடக் கிளிப்பிள்ளை போல் ஒப்புவிக்கின்றனர். இந்த வளர்ச்சியைப்பற்றி என்ன சொன்னாலும் நமக்கு ஏறாது. IMF ஆட்களாயிருந்தால்தான் அதன் உண்மையான பொருள் விளங்கும். மாண்புமிகு மன்மோகன் சிங், மாண்டேக் சிங் போன்ற மூளைகளுக்கு -- சிந்தனை தாங்கிகளுக்கு -- மட்டுமே அதன் சூழ்ச்சுமம் தெரியும். காணியை உழுவது, விதைப்பது, நீர் பாய்ச்சுவது, களையெடுப்பது, அறுப்பது என்னும் வேளாண் அறிவை மட்டுமே தெரிந்துவைத்துள்ள பட்டிக்காட்டான் மருத்துவர் ஐயாவுக்கு Development என்றால் என்ன புரியும் என்கின்றன திராவிடங்கள்? அந்த வித்தையின் அரிச்சுவடிகூட விளங்காத இந்த ஆள், சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை எதிர்க்கின்றார்! அடாத செயல்! மண்ணை விற்று --மன்னிக்கவும், கண்ணை விற்று -- சித்திரத்தை வாங்க வேண்டுமா என்று கேட்பது பட்டிக்காட்டுத்தனமில்லையா? வந்தேறிகள் இப்படியெல்லாம் கேட்டு நம்மை மடக்குகின்றனர்.
1780க்கும் 1820க்கும் இடையில் இங்கிலாந்தில் மாபெரும் தொழிற் புரட்சி நடந்தது. நிலக்கிழமை வாழ்வியல் ஒழிந்து முதலாளியம் என்ற விளைப்புமுறை அங்கு கொலுவேறியது. முதலாளிய தொழிலாக்கம், உழவை விஞ்சி வளர்ந்தது; மலைபோல் குவிந்த தொழிற்பண்டங்களைக் கடல்கடந்து கொண்டு சென்று விற்றனர். ஆங்கிலேயர்கள் கடல்கடந்து போய்க் கைப்பற்றிய மூன்று கண்டங்களிலும் நாடுகளிலும் கிடைத்த இடுபொருள்களை அள்ளிக்கொண்டு வந்தமையால் இங்கிலாந்தில் பஞ்சாலைகள், இரும்பாலைகள் போன்ற பெருந்தொழில்கள் பெருகின. இவற்றால் இங்கிலாந்தின் வணிக வகுப்பு ஏற்றம் கண்டது. தொழிற் புரட்சியால் புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய புதிய வேளாண் கருவிகளை அந் நாடு ஆக்கியது. அப்படி இருந்தும், உணவுப் பயிர்களை விளைவிப்பதைவிட பருத்தி முதலான வணிகப்பயிர்களின் பெருக்கத்திற்கே அது வழிகோலியது. இதனால், வணிகமும் பெருந் தொழிலும் வேளாண்மையை மூன்றாம் நிலைக்குத் தள்ளின. வணிக மும் தொழிலும் வேளாண்மையை விஞ்சி நின்றதால் தோன்றிய எதிர் விளைவுகளை இங்கிலாந்து அன்று உணரவில்லை. ஏனெனில், அதன் குடியேற்ற நாடுகள் அதற்குச் சோறு போட்டன. ஆனால், இங்குள்ள நிலையோ வேறு.
“வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா தொல்காப்பியத்தில் உண்டு. இந் நூற்பா ஓர் இடைச் செருகல் என்பது உண்மைதான். உழவுத்தொழில் நன்கு வளர்ந்து நிலக்கிழமை வாழ்வியலாக இலங்கிய காலமே தொல்காப்பியத்தின் காலமாகும். இடைச்செருகல்கள் எனக் கூறத் தக்கனவற்றையெல்லாம் தொல்காப்பியத்திலிருந்து நீக்கிவிட்டுப் பார்த்தாலும், அத் தொல்காப்பியம் கி. மு. 1500 ஆண்டளவில் இயற்றபட்ட நூல் என்பது என்னுடைய கருத்தாகும். அதாவது, 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி நன்கு குதிர்ந்திருந்த நிலக்கிழமை வாழ்க்கையைத் தொல்காப்பியத்தின் ஊடே காண முடிகின்றது.
அடிமை, குடிமை என்ற சொல்லாட்சிகள் தொல்காப்பியத்தில் உண்டு.
“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”என்றுரைத்துத் தமிழரின் வேளாண் நாகரிகத்தைப் பற்றியும் அது சுட்டு கின்றது. நகர்ப்புற வாழ்க்கையை அடியொற்றிய முதல் நாகரிகத்தைக் கண்டவன் தமிழன். ஆண்டை-அடிமை என்னும் வகுப்புகள் உருவாகாமல் நகரங்களும் நாகரிகங்களும் தோன்றியிருக்க முடியாது. பண் டங்களும் பண்டமாற்றங்களும் இல்லாத வேளாண் வாழ்வியல் இருந்திருக்கவியலாது. பண்டங்களை விற்பவனுக்கும் வாங்குபவனுக்கும் இடையில் வணிகன் என்னும் இடைத்தரகன் இல்லாத மருத வாழ்வியலை எண்ணிப் பார்க்க முடியாது. கோட்டை அரணை முற்றுவது உழிஞைப் போராம். அந்த அரண் எதிரியிடம் விழாமல் தற்காப்பது தும்பைப் போராம். தொல்காப்பியத்திலேயே இந்தப் போரியல் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்தில் நிலக்கிழமை இருந்ததையே இவை காட்டுகின்றன.
தமிழரின் நாகரிகம் தோன்றியபோதே, உழவுக்கும் வணிகத் திற்கும் இடையிலான முரண்பாடும் தோன்றியிருக்க வேண்டும். அம் முரண்பாடு சில வேளைகளில் பகையானதும்கூட உண்டு. உழவுக்கும் வணிகத்திற்கும், உழவுக்கும் தொழிலுக்கும் இடையிலான முரண்பாடுகள் பண்டுதொட்டு பல்வேறு அகடு முகடுகளைத் தொட்டு நிற்பதைத் தமிழரின் வரலாறு நெடுகிலும் காணலாம். வணிகம் எப்போதெல்லாம் உழவை அடக்கியொடுக்கப் பார்த்ததோ, அப்போதெல்லாம் அரசு தலையிட்டு முடிவில் உழவுக்குச் சார்பாக நின்று வணிகத்தின் சிறகுகளைக் கத்தரித்தது. இதுவே பண்டைத் தமிழரின் பொருளியல் வரலாறு. “ஏர்ப்பின்னது உலகம்” என்றும், “உழுவான் உலகத்தார்க்கு ஆணி” என்றும் வகுத்துக்கொண்டதே தமிழரின் பொருளியல் உளத்தியல்; அதுவே ஒரு மரபாகவும் இருந்துவந்துள்ளது. ஐரோப்பிய வாய்பாடுகள் இங்குப் பொருந்தா.
தமிழகத்தின்மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப் பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர். விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும் நெற்களஞ்சியமாயிருந்தது அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தானென வரலாற்றாசிரியர்கள் பாடம் படிக்கின்றனர். தமிழகத்தின்மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும் மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம் என்றே கருதினர். விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில் 1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன் தோற்றான். விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின் நாடுதான்! அன்று மட்டுமே 10 இலக்கம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்!
“சோணாடு சோறுடைத்து” என்பர். அச் சோழநாட்டின் இன்றைய நிலை என்ன? ஒரு பாலைநிலமாக அது திரிந்து வருகின்றது! காரணம்? காவிரிமீது தமிழருக்கு வழிவழியாயிருந்த உரிமையைக் கன்னடன் பறித்துக்கொண்டான். அதுவும், தில்லி ஆண்டையின் பக்கத்துணையோடு! மொழிவழி மாநிலங்கள் என்ற சாக்கில் தமிழகத்தைக் கூறாடியபோது, வற்றாத பெரியாறு ஓடுகின்ற இடுக்கி மாவட்டத்தைத் திராவிடங்களும் இந்தியங்களும் மலையாளிக்குத் தாரை வார்த்தன. அதனால், வெள்ளைக்காரன் கட்டிய முல்லை-பெரியாறு அணையை ஏற்றிக் கட்டிக்கொள்ள மலையாளி விடமாட்டேன் என்கிறான். உச்ச நீதிமன்றத்துத் தீர்ப்பையும் மதிக்க மாட்டேன் என்கிறான். மேற்காகப் பாய்ந்து கடலில் வீணாகக் கலக்கின்ற ஆற்றுநீரையும் தமிழன் கிழக்கே திருப்பிக்கொள்ள விடமாட்டானாம். பாலாற்றைக் கன்னடன் மடக்கியது போதாதென்று தெலுங்கனும் தன்பாட்டுக்கு அணை கட்டி இருப்பதையும் பறிக்கத் துணிந்துவிட்டான். தொன்றுதொட்டுத் தமிழருக்கிருந்த ஆற்றுரிமை பறிபோவதைப்பற்றித் தமிழகத்தை ஆளவந்தவனுக்கும் அக்கறையில்லை. இதற்குக் காரணம் அவர்களது கோழைத்தனமா அல்லது திராவிட வடுகப் பற்றா என்பது உங்களுக்கே தெரியும். அண்டை அயல் மாநிலங்களுடன் தமிழகத்திற்கு உள்ள பூசல்களிலெல்லாம் தில்லிக்காரன் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக வாய்செத்துக் கிடப்பதையும் அறிவீர்கள்.
இந்தச் சூழலில்தான், சிறப்புப் பொருளியல் மண்டிலங்களை அமைத்துக்கொள்ள தமிழகத்தின் கன்னிநிலங்களெல்லாம் வந்தேறிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. பொட்டல் நிலமாயிருந்தால் என்ன? திருவாரூரின் வளங்கொழிக்கும் கழனிகளாயிருந்தால் என்ன? அங்கெல்லாம் இனிச் சிறப்புப் பொருளியல் மண்டிலங்கள்தான் பூக்கப் போகின்றனவாம்! வளர்ச்சி -- Development -- என்னும் செப்படிவித்தையைக் காட்டித் தமிழனின் அடிமடியிலேயே கைவைக்கும் வேலை இது! தமிழரை மண்ணில்லாத மக்களாக்க முனைந்துள்ள வந்தேறிகளின் சூழ்ச்சி இது! தமிழகத்தின் தற்சார்பு வேளாண் பொருளி யலைத் திட்டமிட்டுக் குலைக்கின்ற -- அழிக்கின்ற -- கொடுமை இது!
தமிழா, உனக்குக் காவிரி நீர் எதற்கு? பாலாற்று நீர் எதற்கு? முல்லை-பெரியாறு நீர் எதற்கு? பொன்னையாற்று நீர் எதற்கு? உனக்கென டாஸ்மாக் தண்ணீர் இருக்கையில் என்று அரசே சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் கொடுமை என்ன தற்செயலாகவா நடக்கின்றது? இல்லை! தமிழரின் இளைய தலைமுறையினரில் இன்னொரு தலை முறையை அழிக்கத் துடிக்கும் முயற்சி இது! தமிழரின் பண்பாட்டுச் சீரழிவுக்கு வழிவகுக்கின்ற திட்டமிட்ட சூழ்ச்சி இது! தமிழர் இன ஒழிப்பின் ஒரு காட்சி இது! தமிழ்நாட்டில் தமிழே இல்லை! தமிழ்வழிக் கல்வியும் இல்லை! ஈழத்தைப் பாருங்கள்! அங்கே சிங்களவன் தமிழரின் குடியிருப்புகளை வேண்டுமென்றே குறிவைத்துக் குண்டுமழை பொழிகின்றான். பல்குழல் ஏவுகணைகள் என்றும் மோட்டார் குண்டுகள் என்றும் வான் குண்டுமாரி என்றும் ஓயாது வீசி மக்களை அலைக்கழிக்கின்றான். இருந்தும், அங்குப் பள்ளிகள் இயங்குகின்றன.தாய்மொழிக் கல்வி -- தமிழ்வழிக் கல்வி -- என்ற நுந்தாவிளக்கின் சுடர் அணைந்து விடாமல் இரு கை குவித்துக் கண்ணெனக் காக்கின்றான் அங்கு எம் தலைவன்.
ஆனால், இங்கோ, ஆங்கிலவழிக் கல்விக்கூடங்களைப் புற்றீசல் போல் வளரவிட்டு பெருவணிகமாக்கித் தமிழ்வழிக் கல்வியைத் திட்டமிட்டு ஒழித்து வருகின்றனர் திராவிட வந்தேறிகள்! தமிழில் பேசுவதே தாழ்வு என்னும் தாழ்வு மனப்பான்மையைத் தமிழரின் நெஞ்சங்களில் ஊன்றி வருகின்றனர் வடுக ஆளவந்தார்கள்! அன்றைய நாயக்கராட்சியும் தமிழ்வழிக் கல்வியை முற்றாகப் புறக்கணித்தது. இன்றைய நாயக்க ராட்சியிலும் அதே கதை.
தற்செயலான நடப்பா இது? இல்லை, இல்லை! தமிழ் ஒழிந்தால் தான் தமிழன் ஒழிவான் என்னும் தீய எண்ணத்துடன் திட்டமிட்டே அரங்கேற்றப்படும் சூழ்ச்சி இது!
கடலை ஆண்ட குடி, எம் பரதவர்குடி. மெசொப்பொத்தாமியாவின் உபைதிய நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் ஈழமிய நாகரித்திற்கும், எகிப்தின் நாகரிகத்திற்கும் மெக்சிக்கோவின் மயன் நாகரிகத்திற்கும் வித்திட்டவர்கள் தமிழ்ப் பரதவர்கள்தாம். தமிழரின் நாகரிகத்தை உலகெலாம் கொண்டு சென்று பரப்பிய பண்பாட்டுத் தூதுவர்கள் எம் பரதவர்கள். ஒருகாலத்தில் பாண்டியப் பேரரசையே எதிர்த்து நின்ற பெருங்குடி எம் பரதவர்குடி. அந்தப் பரதவர்கள் வடுகரின் ஆட்சிக்காலத்தில் நீலக்கடல் மீதான உரிமையை இழந்து வெற்று மீனவர்களாகிக் கெட்டுக் குறுகினர். இந்த மீனவர்களின் கடல் சார்ந்த வாழ்வுரிமை இன்று ஒரேயடியாகப் பறிக்கப்படுகின்றது. சிங்களவன் வந்து அவர்களின் மீன்பிடி உரிமைக்கே வேட்டு வைக்கின்றான். அவர் களைச் சுட்டுச்சுட்டுத் தள்ளுகின்றான். ஈழத்தமிழரின் இனவொழிப்புக்கு மட்டுமன்றி எம்முடைய மீனவத் தமிழனின் வாழ்வுரிமைப் பறிப்புக்கும்கூட இந்தியன் அந்தச் சிங்களனுக்கும் துணை போகின்றான்.
இவற்றையெல்லாம் பார்க்கையில்,
“நாற்புறத்தும் பகைவர் கூட்டம்
நடுவினில் எம் தமிழ்த்தாய்”என்ற பாவேந்தனின் குமுறல்தானே நெஞ்சில் நிழலாடுகின்றது?
குமரிமுனைக்கும் தெற்கே இருப்பது இலங்கைத்தீவு. கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் எச்சம் அது. அங்குள்ள தமிழனைப் பாருங்கள்! தமிழனின் அறிவும் அறமும் மறமும் அங்கு வீடுகட்டிக் களமாடுகின்றது. உலகமே அதைக் கண்டு வியக்கின்றது.
ஆனால், இங்குள்ள தமிழனோ பேய்த்தூக்கத்தில் சமைந்து கிடக்கின்றான்! இவனும் ஒரு பூதம்தான்! தன் ஆற்றலையும் பெருமை யையும் ஓர்மையையும் மீளப் பெறாதவண்ணம் ஆளவந்தார்கள் அவனுக்குப் பல்வகைப் போதைகளை ஊட்டி உறங்க வைத்துள்ளனர். கை கால்கள் விலங்கிடப்பட்டு அவன் மலையாய்ச் சாய்ந்து கிடக்கின்றான். நம்மவரில் படித்ததுகளுக்குப் போதை தரும் கஞ்சம்புல் கொத்து ஒன்றை வடுகன் தந்தான். அதைக் கொண்டுபோய் அவர்கள் உறங்கி கிடக்கும் தமிழன் என்ற அந்தப் பூதத்தின் மூக்கருகில் நீட்டி, ‘திராவிடத் தமிழா எழு! திராவிடத் தமிழா எழுந்திரு!’ என்று சொல்லி அவனை எழுப்பப் பார்த்தனர். அவனோ, எழுவதாய் இல்லை. நாமும் அவன் அருகில் போனோம். ‘தமிழன் திராவிடன் அல்லன்; இந்தியனும் அல்லன்; இந்துவும் அல்லன்; தமிழன் தமிழன்தான்; நாம் தமிழர், நாம் தமிழர், நாம் தமிழர் என்போம்!’ என்று அவன் காதில் ஒரு மந்திரத்தை ஓதினோம். மெல்லப் புரண்டு படுத்தான் அத் தமிழன்! புரிந்துவிட்டது! இத் தமிழன் விழித்துக்கொள்வான் என்பது தெரிந்துவிட்டது!
நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து அத் தமிழன் விழித்தெழுந்தால், உலகம் நடுநடுங்கும்! விண் அதிரும்! காற்று முரசறையும்! இருட்கிழித்துத் தளையறுத்துத் தமிழன் வானளாவி நிற்பான்!
அந்த நாள் நெருங்கிவிட்டது!
அதனால், கையை உயர்த்திக் கூறுவேன்;
எம் இனம் எழும்!
எந்தமிழினம் உயிர்த்தெழும்! சிலிர்த்தெழும்!
எழும்! எழும்! எழும்!
நன்றி. வணக்கம்.

ஞாயிறு, 1 மே, 2011
மறைக்கப்பட்ட தமிழரின் வரலாறுகள்....
நன்றி: திரு.ராஜதிரு மகன்.....
இயக்குனர் பால சந்தருக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்ற செய்தி வந்ததும் .....
இது ரொம்ப பொருத்தமான விருது . ஆனா இதுவே ரொம்ப லேட் . 'நூறாண்டுகளுக்கு ' முன்பே பாலச்சந்தருக்கு இந்த விருதை கொடுத்திருக்க வேண்டும் (அதாவது பால்கே பிறப்பதற்கு முன்பே?) என்று மாய்மாலம் பண்ணும் சில பல பத்திரிக்கைகள் ஒருபுறம் .
"அந்த விருதுக்கு உண்மையிலேயே பாலச்சந்தர் தகுதியானவர்தானா? உலகப் படங்களைப் பார்தது காப்பியடித்து கதைச்சுருக்கம் எழுதித் தருவதையே அனந்துவுக்கு வேலையாக கொடுத்து அவற்றை சுட்டு படங்கள் எடுத்தவர் ... அதையும் படமாக எடுக்காமல் , சினிமா என்பது கேமரா மொழி என்பதையே மறந்து ரேடியோ நாடகங்களை பிலிமில் எடுத்து பீம்சிங் ஸ்ரீதர் போன்ற மாபெரும் இயக்குனர் மேதைகள் உயர்த்தி வைத்த தமிழ் சினிமா உத்திகளை பல அடிகள் பள்ளத்தில் தள்ளியவர் ,...... தனது அதிமிகைப் படங்களின் வெற்றியின் மூலம் மகேந்திரன் பாரதிராஜா போன்ற இயக்குனர் சிற்பிகளையும் பின்னால் இழுத்தவர் ... அப்படிப்பட்ட பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது தருவது நியாயமா ?" என்று கொந்தளிக்கும் 'அறிவுஜீவி'கள் மறுபுறம் .....
இந்த இரண்டு கட்சிகளையும் ஒரே பக்கம் ஒதுக்கிவிட்டு .. உண்மையிலும் உண்மையான ஒரு விசயத்தைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது .
அதாகப் பட்டது நண்பர்களே .....!
ஆத்துத் தண்ணி கடைமடைப் பகுதிக்கு கடைசியாகத்தான் வரும் எனறால் அது யதார்த்தம் . ஆனால் சிறந்த சாதனைகளுக்காக தரப்படும் உயர்ந்த விருதுகளைக் கூட தகுதி . தரம் பார்க்காமல் வடக்கே இருந்து தெற்கே வரிசையாகக் கொடுத்து கடைசியில்தான் தமிழ்நாட்டுக் கலைஞனுக்கு தருவோம் என்றால் அப்படி செய்பவன் கூட மடையன்தான் . அதுவும் முதல் மடையன் அல்ல . அவன்தான் கடை(சி) மடையன் .
தாதா சாஹிப் பால்கே விருதும் அப்படித்தான் யுகக் கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் வந்தது . "சிவாஜியைப் பார்த்துதான் நடிப்பு என்றால் என்ன என்றே அறிந்தேன் " என்றும் "புராணங்களில் திரேதா யுகம் , கலியுக என்று பல யுகங்கள் இருக்கலாம் . ஆனால் நடிப்பு எனறால் அது ஒரே யுகம்தான் . அதான் பெயர் சிவாஜி யுகம் " என்றும் கூறிய கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு எல்லாம் தாதா சாகிப் பால்கே விருதைக் கொடுத்து விட்டு கடைசியாக சிவாஜிக்கு தாதா சாகிப் பால்கே விருதை தூக்கிப் போட்டார்கள் .
சிவாஜிக்கு முன்பு ராஜ்குமாருக்கு கொடுத்தபோதே தாதா விருது , தாத்தா விருதாக வீரியம் இழந்தது .
இப்போது போய் கஞ்சா கருப்பு , சிசர் மனோகர் , கிரேன் மனோகர் போன்ற வளரும் நடிகர்களிடம் கூட உங்களுக்கு தாதா சாகிப் விருது வேணுமா இல்ல மூவாயிரம் ரூபா பணம் வேணுமா என்று கேட்டுப் பாருங்கள் . ":அந்த மானம் கெட்ட விருது நமக்கு எதுக்குண்ணே.. காசு இருந்தா நாலு காஞ்ச வயித்துக்கு சோறாவது போடலாம் " என்பார்கள் . தாதா சாஹிப் பால்கே விருதின் லட்சணம் அவ்வளவுதான் . அந்த விருதுதான் இப்போது பாலச்சந்தருக்கு வழங்கப் பட்டுள்ளது .
இருக்கட்டும் .
ஆனால் இந்திய அளவில் வாழ் நாள் சாதனையாளருக்கான விருதை தாதா சாகிப் பால்கே பெயரில்தான் வழங்க வேண்டுமா? அவரை விட தகுதியானவர் யாரும் கிடையாதா? உண்டு . இருக்கிறார்ஒருவர் . அநியாயமாக மறைக்கப் பட்ட ஒரு சரித்திரம் அது .
ஒட்டுமொத்த இந்தியாவில் இந்தியர் அனைவரும் சமம் என்று வடக்கத்திவாலாக்கள் உண்மையிலேயே கருதி இருந்தால் இந்த தாதா சாகிப் பால்கே விருதை யார் பெயரில் வழங்கி இருக்கே வேண்டும் தெரியுமா? சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற தமிழனின் பெயரில்தான் வழங்கி இருக்க வேண்டும் . சாதனையாளர் சாமிக்கண்ணு வின்சென்ட் விருது என்ற பெயரில் .
யார் இந்த சாமிக்கண்ணு வின்சென்ட்?
இன்று சினிமாவில் கோடி கோடியாகக் குவித்து மஞ்சள் குளிக்கிற அனைவராலும் நினைவு கூறப் படவேண்டிய தமிழன், இந்தியன்தான் சாமிக்கண்ணு வின்சென்ட் . ஆம்! .இந்தியாவிலேயே முதன் முறையாகப் படங்களைத் திரையிட ஆரம்பித்தவர் இந்த சாமிக்கண்ணுதான். கண்ணு....... !
1883 ல் பிறந்த சாமிக்கண்ணு 1905 இல் தென்னக ரயில்வேயில் எழுத்தராக நம்ம திருச்சிராப் பள்ளி புகைவண்டி நிலையத்தில் பணியாற்றி வந்தார் மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் செய்த பணி அவருக்கு திருப்தி தரவில்லை (ஆத்தாடி அன்னிக்கு அது எவ்வளவு பெரிய தொகை!)
அப்போது அவர் திருச்சியில் ஒரு பிரெஞ்சுக்காரரைச் சந்தித்தார் . பெயர் டூபான். டூபானின் தொழில் சினிமாப் படம் காட்டுவது (பார்றா !) இந்தியா, இலங்கை என்று பிரயாணித்துப் போய் சினிமா படம் காட்டி பிழைத்தவர் அவர் . டூபான் காட்டிய சில திரைப்படங்களைப் பார்த்த சாமிக்கண்ணுக்கு அந்த புதிய தொழில்நுட்பம் மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது .... சில்க் சுமிதாவின் பார்வை மாதிரி !. பிடித்துப் போனது.... பத்மினியின் நவரசம் மாதிரி !
ஆனால் டுபானுக்கு? நம்ம ஊர் பழக்கமில்லாத ஊர்.... புதிய சூழ்நிலை!
எனவே தன் வியாபாரத்தை தொடர முடியாத டூபான் தனது படம் காட்டும் கருவிகளையும், படச்சுருள்களையும் விற்க முடிவு செய்தார். சந்தோஷமாக வாங்கிக் கொண்டார் சாமிக்கண்ணு . இப்படியாக சினிமா எனும் சொர்க்க பூமி (நன்றி 'புதிய பாதை' பார்த்திபன்) ஒரு பிரஞ்சுக்காரன் கையில் இருந்து ஒரு இந்தியன் கைக்கு முதன்முதலாக வந்தது அப்போதுதான் .
டூபானிடம் இருந்து காசு போட்டு வாங்கிய படக் கருவிகளையும் படச்சுருளையும் கொண்டு சாமிக்கண்ணுவே ஒளிப் படங்களை காட்ட ஆரம்பித்தார்.
1897 ஆம் ஆண்டு லூமியர் சகோக்கள் இயேசுவின் வாழ்க்கை (the life of jesus christ ) என்ற படத்தை நொடிக்கு பதினாறு பிரேம்கள் என்ற மேனிக்கு தயாரிக்கிறார்கள் . இந்தப் படம் 1896 ஜூலை ஏழாம் தேதி முதன்முதலாக இந்தியாவில் திரையிடப் பட்டது
அந்தப் படத்தை சொந்தமாக ஒரு பிரதி வாங்கிய சாமிக்கண்ணு அந்தப் படத்தை இந்தியா முழுக்க போய் போட்டுக் காட்டினார் படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.(மதம் மாறிய கிறிஸ்தவர் அல்லவா? அவருக்கு பொருத்தமான படத்தைதான் காட்டி இருக்கிறார் . ஆமென்!)
தொடர்ந்து லூமி சகோதரர்கள் தயாரித்த படமான "ரயிலின் வருகை' (மலைப்பாங்கான பின்னணி ரயில் ஒன்று நிலையத்தில் வந்து ரயில் நிற்க ஆட்கள் ஏறி இறங்குவதுதான் 46 செகண்ட் ஓடும் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் நாடு முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டினார் சாமிக்கண்ணு வின்சென்ட்
தவிர , அயல் நாடுகளிலிருந்து படச் சுருள்களையும், எந்திரங்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்தினார் சாமிக்கண்ணு . ( இவர் தயாரித்த படங்களுடன் சேர்த்து, மொத்தம் 136 வெளிநாட்டு மவுனப் படங்கள் தமிழகத்தில் காட்டப் பட்டுள்ளன ) தனது படங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு, துண்டு பிரசுரங்களை அச்சடிக்க 1916 இல் மின்சாரத்தால் இயங்கும் முதல் அச்சகத்தையும் கோவையில் நிறுவிஇருக்கிறார்
ஆந்திரம், கேரளம், மும்பை, கல்கத்தா, பெஷாவர், இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் இவர் படங்களைத் திரையிட்டிருக்கிறார். இதற்காக அப்போது வெளிநாட்டில் இருந்த ஒரு படம் தயாரிக்கும் கம்பெனியிடம் ஒப்பந்தமும் போட்டிருக்கிறார். . மின்வசதி இல்லாத நேரத்தில் மெக்னீஷியத்தைப் பயன்படுத்தி ஒளி உண்டாக்கிப் படத்தைத் திரையிட்டிருக்கிறார்.. படம் பார்ப்பதற்குகட்டணமாக அணாவாகவோ, அல்லது நெல்- தானியங்களோ வாங்கியிருக்கிறார் .
மவுனப் படம் என்பதால் அதன் கதையை விளக்குவதற்காக ஒவ்வொரு காட்சியிலும் கையில் குச்சியுடன் திரையருகே நிற்பாராம் சாமிக்கண்ணு .
(கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் மருதமுத்து மூப்பனார் என்பவர் இங்கிலாந்து சென்று அன்றைய இளவரசரின் திருமணத்தைப் படம் பிடித்து வந்து தமிழகத்தில் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். மருதமுத்து மூப்பனாரின் புகைப்படம்கூட கிடைக்கவில்லை என்பது வருத்தமான செய்தி )
சும்மா குச்சியோடு நின்றதோடு நின்று விடவில்லை சாமிக்கண்ணு . படம் காட்டும் முறையில் பல புதுமைகளை அறிமுகப் படுத்தினார் அவற்றுள் ஒன்று தான் டென்ட் (கூடார) கொட்டகை சினிமா. ஒரு புது ஊருக்கு படம் காட்டச் சென்றால் அங்கு இருக்கும் காலி மைதானங்களில் கூடாரம் அமைத்து படங்களைத் திரையிடுவார் . இப்படி டெண்ட் அடித்து படம் காட்டுவது இவர் செய்த பெரிய புதுமை
அது மட்டுமல்ல . சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் சினிமா காட்ட என்றே முதல் டென்ட் சினிமா கொட்டகையைக் கட்டினார்சாமிக்கண்ணு . (பெயரைப் பார்த்தீர்களா? தாமஸ் ஆல்வா எடிசனுக்கு சமர்ப்பணம்!) மின்சார விளக்குகள் ஒளிர்ந்த அவரது கொட்டகைகளுக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, வட இந்தியா , மலேசியா ,சிங்கப்பூர் , பர்மா ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார்.
மழைக்காலத்தில் டெண்டுக் கொட்டகை ஒழுகி படம் பார்க்க விடாமல் தொந்தரவு செய்வதைப் பார்த்த சாமிக் கண்ணு சினிமா காட்ட கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை முடிவு செய்து முதன்முதலில் (இந்தியாவில் என்று தாராளமாகச் சொல்லலாம்) 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (பின்னாளில் அதுதான் கோவை டிலைட் தியேட்டர் )இன்று அந்தச் சாலை வெரைட்டி ஹால் சாலை என்றே அழைக்கப்படுகிறது. மின்சாரத்தைப் பயன்படுத்தித் திரையிட்ட நாட்களில் மின்வசதியால் இயங்கும் தியேட்டர் என்று சாலையில் கூவி விளம்பரம் செய்வார்களாம் இந்தத் திரையரங்குக்கு .
சாமிக்கண்ணுவைப் பின்பற்றி சென்னையில் வெங்கையா என்பவரால் கெயிட்டி திரையரங்கம் கட்டப் பட்டது , நீண்ட ஆயுள் பெற்ற திரையரங்கம் இது )இதையடுத்து சென்னையில் மேலும் சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.
இங்கேதான் அந்த சம்பவம் பற்றி குறிபிட வேண்டியுள்ளது .
வின்சென்ட் சாமிக்கண்ணு காட்டிய ஏசுவின் வாழ்க்கை படத்தை பார்க்கிறார் ஒருவர் ,
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள , டிம்பகேஷ்வர் என்ற ஊரில் பிறந்து மும்பையிலும் பரோடாவிலும் கல்வி கற்று கோத்ரா நகரில் ஒரு போட்டோ கிராபராக வாழ்க்கையைத் துவக்கி, இந்திய தொல்பொருள் துறையில் டிராப்ட்ஸ் மேனாக பணியாற்றி ஓவியர் ராஜா ரவி வர்மாவிடமும் பணியாற்றி .....லூமியர் சகோதரர்களின் கீழ் பணியாற்றிய நாற்பது மேஜிக் பணியாளர்களில் ஒருவரான கார்ல் ஹெட்ஸ் என்பவரையும் சந்திக்கும் வாய்பையும் பெற்றிருந்த ....(கொஞ்சம் மூச்சு விட்டுக்கவா?)அவரின் பெயர் தண்டி ராஜ் கோவிந்த பால்கே . உங்கள் எல்லோருக்கும் உடனே புரிய வேண்டும் எனறால் தாதா சாஹேப் பால்கே !
நம்ம ஊரு வின்சென்ட் சாமிக்கண்ணு காட்டிய இயேசுவின் வாழ்க்கை படத்தைப் பார்தது கவரப் பட்டு சினிமா என்கிற தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்ட பால்கே, பிறகு படம் எடுக்கவே முடிவு செய்தார் . மும்பை காரனேஷன் அரங்கில் நடிக்கப் பட்ட புண்டளிக் என்ற மேடை நாடகத்தை முதன்முதலில் படம் பிடித்துப் பார்த்தார் பால்கே . (சத்தம் எதுவும் வராது . ஊமைப் படம்தான் )
1912 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் படமான அதாகப் பட்டது முதல் மவுனப் படமான ராஜா ஹரிச் சந்திராவை தயாரித்து 1913 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள், புண்டளிக் மேடை நாடகத்தை படம் பிடிதத , அதே மும்பை காரனேஷன் அரங்கில் போட்டுக் காட்டினார் .
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம் அந்த ஹரி சந்திரா .
படம் எடுத்த பால்கே பெயரால் வருடா வருடம் கம்பீர திரை விருது
அதில்தான் நம்ம சிவாஜிக்கு தர வேண்டிய சமயத்தில் தந்து கவுரவப் படுத்தாமல் தோலான் துருத்திகெல்லாம் கொடுத்து விட்டு கடைசியாக தூக்கிப் போட்டார்கள் .
ஆனா அந்த பால்கே வுக்கே படம் எடுக்க தூண்டுதலாக இருந்த ... பால்கேவுக்கு சினிமா சொல்லிக் கொடுத்த முதல் இந்திய சினிமாக்காரர் வின்சென்ட் சாமிக்கண்ணு பேரால் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் விருதாவது உண்டா?
ஒருவேளை வின்சென்ட் சாமிக்கண்ணு அந்தக் கால ராமேஸ்வரம் மீனவரோ என்னவோ?
பால்கேவுக்கு படம் காட்டியதோடு நின்றிருந்தால் கூட சாமிக்கன்னுவைப் புறக்கணிப்பதற்கு ஒரு சொட்டை சொள்ளை காரணமாவது கிடைக்கும் .
ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்த சாமிக்கண்ணுவின் சாதனைகளைச் சொல்லவா?
தாங்குவீர்களா?
கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அரிசி ஆலையையும், நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே. . தனது ஆலையில் உற்பத்தியான உபரி மின்சாரத்தை கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு தர அரசிடம் அனுமதி பெற்றார். சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் மின்சாரத் துறை பொறுப்பிலிருந்த சி. பி. ராமசாமியின் ஆதரவால் தனியாக ஒரு மின்சார உற்பத்தி ஆலை அமைக்க சாமிக்கண்ணுக்கு உரிமம் வழங்கப் பட்டது. அவர் உற்பத்தி செய்த மின்சாரத்தால் கோவையின் வீதிகளில் மின்சார விளக்குகள் ஒளிர்ந்தன.
சினிமா துறைக்கும் சாமிக்கண்ணு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல
ஆரம்பத்தில் படங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த சாமிக்கண்ணு பின்னர், மக்களின் ரசனைக்க்கேற்றபடி புதிய படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். பேசும் படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, 1933 இல் கல்கத்தா சென்று வள்ளி திருமணம் என்ற பேசும்படத்தை தயாரித்தார் . புகழ்பெற்ற நடிகை நடிகை டி பி ராஜ லட்சுமி , வள்ளியாக நடித்த அந்தப் படம், பெருவெற்றி பெற்றது. சென்னை எல்பின்ஸ்டோன் திரையரங்கில் அப்போதே தினம் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டது அந்தப் படம் . . அதன் வெற்றியைத் தொடர்ந்து 1935 இல் ஹரிச்சந்திரா என்ற படத்தை சாமிக்கண்ணு தயாரித்தார். பிரஃபுல்லா கோஷ் இயக்கத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. பி. ராஜலட்சுமி ஆகியோர் நடிப்பில் அது கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டது. அடுத்து சாமிக்கண்ணு தனது வெரைட்டி ஹால் டாக்கீஸ் நிறுவனம் மூலம் தயாரித்த படம் சுபத்ரா பரிணயம் .
இதோடு போச்சா ?1936 இல் பேலஸ் திரையரங்கை விலைக்கு வாங்கிய சாமிக்கண்ணு அதில் இந்தி மொழித் திரைப்படங்களைத் திரையிட்டார்.(அப்படியும் புறக்கணிச்சுட்டாங்களே ) மொத்தம் பதினெட்டு திரையரங்குகள் வைத்திருந்தார் சாமிக்கண்ணு .
பின்னாளில் பெறும் புகழ் பெற்று தமிழ் சினிமா நாயகர்கள் பலரை உருவாக்கிய சென்ட்ரல் ஸ்டுடியோஸ் 1937 இல் கோவையில்தொடங்கப் பட்டபோது, அதில் இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். 1939 இல் ஓய்வு பெற்றார்.சாமிக்கண்ணு 1942 இல் மரணமடைந்தார்.
இப்படிப் பட்ட ஒரு மாபெரும் சினிமாக்காரனை மறைத்து விட்டுதான் தாதா சாஹிப் பால்கேவை மட்டு தூக்கிப் பிடித்தார்கள் தாதாத்தனமாக !
இப்போது சொல்லுங்கள் தாதாசாஹிப் பால்கே விருது யார் பெயரால் வழங்கப் படவேண்டும் . இந்த உண்மையை உரக்கச் சொல்லிவிட்டு அப்புறம் நம்மவர்கள் விருது வாங்கப் போகட்டும் .
வெள்ளி, 22 ஏப்ரல், 2011
கிறுக்கல்கள்
"ஒரு மனதுடன் இணையத் துடிப்பது காதல்
ஒவ்வொரு மனதுடனும் இணையத்துடிப்பது நட்பு.."
"தள்ளாத வயதிலும்
தள்ளாடாத காதல்
உள்ளாடும் உயிர்
உள்ளவரை..."
எத்தனை பிறவியில் செய்த தவமோ? இன்று
இத்தனை உறவுகள் என்னோடு...

புதன், 16 மார்ச், 2011
ஞாயிறு, 13 மார்ச், 2011
தங்கவயல் ஆலமரம்!
இதுதான் ஆலமரம்...!!!
ஓ....ஆலமரம் எங்களுக்குத் தெரியாதா...?
நாங்கள் பார்த்ததில்லையா...? என்று கேட்கிறீர்களா..?
பார்த்திருப்பீர்கள். ஆனாலும் இது சற்றே மாறுபட்ட ஆலமரம்.
கோலார் தங்கவயலில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ள இந்த ஆலமரம் தங்கவயலுக்கு ஒரு Land Mark. கோலார் தங்கவயலின் வரவேற்பு வளைவு.
பாலாறு எனப்படும் கண்ணுக்குத் தெரியாத ஆறு இந்த மரத்தின் கீழே தான் மண்ணுக்கடியில் உருவாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இதன் பக்கத்திலுள்ள Ninth Reefs என்று அழைக்கப் பட்ட சிற்றோடையில், மண்ணை சிறிதளவு அகழ்ந்தாலே சுவையான நீர் ஊறும். இம்மரத்தின் பக்கத்தில் உள்ள சிறு குளத்தில் நீர் வற்றுவதே கிடையாது. எப்போதும் நீர் நிறைந்தே காணப்படும்.
தங்கவயலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் எல்லாம், பதினொரு
கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்காருபேட்டை என்னும் ஊரிலிருந்து மாட்டு வண்டியில்தான் வரவேண்டும். பொருட்களை ஏற்றிகொண்டு வரும் வழியில் வண்டியோட்டிகள் உறங்கி விடுவர். காளைகள் சரியாக இந்த ஆலமரத்தடியில் வந்து நின்று விடும்.
வண்டியோட்டிகள் அங்கே இறங்கி, தாம் கொண்டு வந்திருக்கும் கேப்பைக் களிமூட்டையை இந்தக் குளத்தில் நனைத்து கொள்வர். ஒரே மிளகாய் வற்றலையும் சிறிது உப்பையும் அங்குள்ள சுமைதாங்கிக் கல்லின் மீது வைத்துப் பொடித்துக் கொண்டு, அதில் கேப்பைக் களியை தொட்டு உண்டு விடுவர்.
இந்த சாலையில் போவோர் வருவோர்க் கெல்லாம் குடிநீர் தந்தது இந்த ஆலமரத்துக் குளமே. அக்காலத்தில் இவ்வழியாக வந்த அரசப் படைகள் இந்த ஆலமரத்தின் கீழ் ஓய்வெடுத்துக் கொண்டதாகக் கூறுவர். மழைக் காலத்தில் இங்கே தங்குவதற்காக கருங்கற்களால் ஆன சிறிய மண்டபம் இருந்தது. நாளடைவில் அதற்கு மஞ்சள் பூசி குங்குமமிட்டு கோவிலாக மாற்றிவிட்டனர் பக்த"கேடி"கள்
நீங்கள் பார்ப்பது இன்றைய நிலை. குளத்தில் தேங்கிக் கிடப்பது முழுக்க சாக்கடை நீர். நிலத்தடியில் ஊறிய பாலாற்றைக் காணவில்லை. அரையடி மண்ணைக் கிளறினால் ஊறிய நீர் இன்று அய்ந்நூறு அடி ஆழத்துக்குப் போய்விட்டது. நாற்ப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நாங்கள் இங்கு வந்து விளையாடியபோது, காடை, கள்ளிக்காக்கை என்று சொல்லப்பட்ட ஒரு பறவை,
வித விதமான குருவிகள், கழுகுகள், அவைகளின் பின்னணி இசையுடனே விளையாடினோம்.
இன்று இந்த ஆலமரத்தின் நிலை? சுற்றுப்புறம் கட்டிடங்களால் வளர்ச்சி பெற்றுவிட்டது. ஆனால் சுற்றுப்புறச் சூழலும் அமைதியும் காணாமல் போய்விட்டது.
கடந்த கால நினைவுகள் கண்களில் நீராய் வழிந்தோடியது...
வேளாண்மை நிலை
Rajasekaran Seetharaman
காவிரியே காஞ்சுபோயி
கால்வாயா மாறிப் போச்சு,
வைகையும் வத்திப்போயி
வரிக்கோடா மாறிப் போச்சு
ஏரியையும் கூறு போட்டு
...ஏலத்துல வித்தாச்சு,
வயலெல்லாம் வறண்டுபோயி
வீட்டு மனையா பிரிஞ்சு போச்சு
பண்ணையார் வயலில் நாத்து நட
"பாரின்" மெஷின் வந்தாச்சு
கொஞ்ச நஞ்சம் தெரிஞ்சவங்களுக்கு
நாத்து நட வயலே இல்லை..
வெள்ளைக்காரி நாத்து நட
கத்துக்க மட்டும் வயலுண்டு..ஹ்ம்ம்
எங்க வீட்டுப் பெண்டுகளை
குற்றம் சொல்லி என்ன பயன்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)